15. எடிட்டிங்
ஆங்கில எழுத்துருக்களை பெரியவை (கேபிடல் லெட்டர்ஸ்) என்றும் சிறியவை (ஸ்மால் லெட்டர்ஸ்) என்றும் வகை பிரிப்போமல்லவா? அதன் பின்னணி என்ன தெரியுமா..?
உலோகப் பாளங்களால் ஆன எழுத்துருக்களை வரிசையாக அடுக்கி அச்சுக் கோத்து அதன் மூலமாக வாக்கியங்களை உருவாக்கும் பழைய அச்சிடும் முறையில் எழுத்துருப் பாளங்களை மரப்பெட்டிகளில் அடுக்கி வைத்திருப்பார்கள். அதிகமாகப் பயன்படும் சிறிய எழுத்துகளை கைக்கருகில் இருக்கும் கீழ்வரிசை மரப்பெட்டியிலும் அதிகம் பயன்படாத பெரிய எழுத்துகளைக் கொஞ்சம் உயரமான இடத்தில் இருக்கும் மேல் வரிசை மரப்பெட்டியிலும் அடுக்கி வைத்திருப்பார்கள்.
கீழேயுள்ள மரப்பெட்டி லோயர் கேஸ் (கேஸ் என்றால் பெட்டி) எனவும் மேலேயுள்ள மரப்பெட்டி அப்பர் கேஸ் எனவும் அழைக்கப்பட்டது. இதுவே பிற்காலத்தில் கீபோர்டில் டைப் செய்யும் போதும் சிறிய எழுத்துக்களுக்கு லோயர் கேஸ் என்றும் பெரிய எழுத்துக்களுக்கு அப்பர்கேஸ் என்றும் பெயர்வரக் காரணம்.
Very informative episode