செப்டெம்பர் 8, 2022 அன்று ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது. பிப்ரவரி 6 1952லிருந்து எழுபது ஆண்டுகள், ஏழு மாதங்கள், மூன்று நாட்கள் பிரிட்டனின் ராணியாகவும், கனடா, அவுஸ்திரேலியா உட்படப் பல பொதுநலவாய நாட்டு (காமன்வெல்த் நாடுகள்) அரசுகளின் தலைவியாகவும் (ஹெட் ஆஃப் த ஸ்டேட்) இருந்த இரண்டாம் எலிசபெத் ராணி காலமானார்.
இந்த எழுபது ஆண்டுகளில் எத்தனையோ மாற்றங்கள் வந்த போதிலும் மக்களின் மனதில் இடம் பிடித்த மகாராணியாகவே அவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரிட்டனில் வாழும் மக்கள் மட்டுமல்லாது உலகெங்கிலும் பலரது மனதில் அவரது மறைவு சோகத்தை உருவாக்கியது.
Add Comment