என் மகளுடைய பாடப் புத்தகத்தில் புல்லி (கப்பி) பற்றி விளக்குவதற்கு இப்போதும் கிணறு படம் தான் இருக்கிறது. பென்டுலம் (ஊசல்) பற்றி விளக்க அந்தக் காலக் கடிகாரம். காலத்திற்கு ஏற்றவாறு உதாரணங்களை மாற்ற வேண்டாமா..? கிணற்றைக் கண்ணால்கூடப் பார்க்காத என் மகளுக்கு நீர் இறைப்பதை எப்படி விளக்க முடியும்..? எல்லாப் படத்திலும் வருகிற, வில்லன் கை தசை பயிற்சிக்காக உபயோகிப்பதில் இருக்கும் கப்பியை காட்டித்தான் விளக்கினேன். கடந்த முப்பது ஆண்டுகளில் நம் வாழ்வோடு கலந்திருந்த எத்தனை விஷயங்கள் காணாமல் போய் விட்டன..!
Good
வழக்கம்போல செம! நினைவுகள் திரும்பி வர மறுக்கின்றன!
விஸ்வநாதன்
பாதாளகரண்டி மூலம் வாளியை எடுத்த அனுபவம் உண்டு.சுமித் மிக்ஸி தான் முதலில் வாங்கிய மிக்ஸி.அதை கிராமத்து வீட்டில் இன்னும் வைத்துள்ளோம்.அது இப்பவும் வேலை செய்கிறது. அம்மியில் மிளகாயை வைத்து அரைக்கும் அதன் வாசம் பசியை தூண்டும்.இப்பவும் நினைத்தாலே நுகர முடியும்.அம்மி கூட இப்போ உள்ளது.ஆனால் அந்த நாட்டு பச்சை மிளகாய்?அனைத்தும் ஹைப்ரீட்.