தமிழ் இணையம் செயல்படத் தொடங்கிய காலத்தில் உயிர்ப்புடன் இருந்த பல இணையத்தளங்கள் இன்று இல்லை. அல்லது இருக்குமிடம் தெரியாமல் இருக்கின்றன. இருபதாண்டுகளுக்கு முன்னர் இன்றைக்கு உள்ளதைப் போன்ற தொழில்நுட்ப வளர்ச்சி கிடையாது. இணையத் தொடர்பு என்பதே கோயில் பிரசாதம் போலக் கொஞ்சமாகக் கிடைக்கிற ஒரு சங்கதிதான். டயலப் என்கிற ஒரு பாடாவதி கனெக்ஷனை வைத்துக்கொண்டு மக்கள் இணையத்துடன் துவந்த யுத்தம் நடத்துகிற காட்சியே காமெடியாக இருக்கும். வாசகர்களுக்கே அப்படி என்றால் நடத்துபவர் நிலைமையை யோசித்துப் பாருங்கள்!
தமிழ் இணைய சரித்திரத்திற்கு இந்த ஆவணம் தேவை, நன்றி. இதோடு தமிழ். நெட், ஆஸ்ட்ரேலியா பாலா மற்றும் மலேசிய முத்து தொடங்கிய மின்-அஞ்சல் குழு இதற்கெல்லாம் மின்னோடி, அது சுமார் 1995 ஆண்டே தொடங்கப்பட்டது.