சமீப காலமாக மிக அதிகம் பேசப்படுகிற சங்கதிகளுள் ஒன்று, ‘க்ரிப்டோ கரன்ஸி’. அது ஒரு அச்சிடப்படாத, கண்ணுக்குத் தெரியாத பணம். தற்போது எப்படி கிரெடிட் கார்டு, ஜீபே என்று காகிதப் பணத்திற்கு மாற்றாக, கார்டுகள், செயலிகள் உள்ளனவோ அது போலவே காகித பணத்திற்கு மாற்றாக ஒரு பண்டமாற்று முறை வேண்டும் என்று தனிப்பட்ட சில நபர்களால் கொண்டுவரப்பட்டது தான் கிரிப்டோ காயின் மற்றும் டோக்கன். இதற்கு என்று ஒரு உருவமோ மதிப்போ கிடையாது. இதை கண்ணால் பார்க்க முடியாது. ஆனால் ஒரு செயலியில் இருந்து இன்னோரு செயலிக்கு மாற்ற முடியும். கிரிப்டோ காயினை செயலிகள் மூலம் பரிமாற்றம் செய்து பொருள் வாங்க முடியும், காகிதப்பணத்திற்கு ஈடான மதிப்பினை பரிமாறிக் கொள்ள முடியும். சுருங்கச் சொன்னால் விரிச்சுவல் பணம்.
பிட்காயின் வளர்ச்சி கண்கூடாக கண்டாலும் அதில் முதலீடு செய்ய சாமான்யர்களுக்கு மனம்வராது.அது நல்லதும் கூட.அது திரிசங்கு சொர்க்கம் போலவே உள்ளது.