17. குளமும் கடலும்
“புனித நூல்களை உங்கள் மதம் என்று எண்ணி விடாதீர்கள். அவை சொற்களால் எழுதப்பட்டுள்ளன. சொற்கள் மனிதர்களைப் பிரித்து விடுகின்றன. சொற்கள் மனித குலத்தையே பிரித்து வைத்துள்ளன. மனிதர்களுக்கு இடையே எழுப்பப்பட்டுள்ள தடுப்புச் சுவர்கள் செங்கற்களால் கட்டப்படவில்லை. சொற்களாலேயே கட்டப்பட்டுள்ளது. இதே சுவர்தான் மனிதனுக்கும் உண்மைக்கும் இடையில் நிற்கிறது.” – ஓஷோ
ஓஷோவிடம், “உங்கள் வாழ்வின் சேதி என்ன..?” என்று ஒரு சீடர் கேட்டார். ஓஷோ பதிலளித்தார். “விழிப்புற்றவர்கள் அனைவரும் உயிர்ப்புடன் இருக்கிறார்கள். ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவர்கள் அனைவரும் தவற விடுகிறார்கள். இதுதான் சுருக்கமாக என் வாழ்வின் சேதி.”
Add Comment