கால் காசென்றாலும் கவர்மெண்ட் காசு சம்பாதிக்க வேண்டும் என்று அக்காலத்தில் சொல்வார்கள். அரசுப் பணி என்பது அப்படியொரு சொகுசு வாழ்வாகப் பார்க்கப்பட்டது. உண்மையில் அரசுப் பணி சொகுசுதானா? அதன் உள்ளே நுழைவது எளிதா?
அரசு உத்தியோகம் என்பது நிரந்தரமானது. இந்த நிரந்தரம் தரும் சொகுசு வாழ்நாள் முழுவதற்கும் நீடிக்கும். வாழ்ந்து முடித்த பிறகும் குடும்பத்திற்கும் இருக்கும். கொஞ்சம் சிரமப்பட்டு படித்து உள்ளே வர வேண்டும். இதை இலட்சியமாகக்கொண்டால் எதிர்கால வாழ்வில் சொகுசு நிச்சயம்.
இதற்கான வழிமுறைகள் என்ன? வந்த பிறகு என்னென்ன நடக்கும்?
எல்லாம் சரி,அருமையும் கூட ஆனால் ஸம்திங் கொடுத்து உள்ளே நுழைபவர்கள் பற்றியும் எழுதினால் ஆல் ரவுண்ட் தான்!
விஸ்வநாதன்
எல்லா கேட்டும் பக்கா லாக். வெற்றியை நிர்ணயிக்கும் வாய்மொழித்தேர்வில் மட்டும் ஸம்திங் இருக்கு. ஆனால் ஆதாரமற்ற எந்த தகவலையும் எழுதக்கூடாது
அரசு அலுவலர் அல்லது அரசுப்பள்ளி ஆசிரியர் என்றால் மாலை விளக்கு வைக்கும் நேரத்திற்குள் வீட்டுக்கு வந்து விடுவார்கள். சனி, ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில் கணவருடன் வெளியில் செல்லலாம் என்பது போன்ற காரணங்களுக்காக அரசுப்பணி மாப்பிள்ளைகளுக்கு ஓ.கே சொன்ன பெண்களும் பெற்றோர்களும் ஒரு காலத்தில் அதிகம்.
ஆனால் தற்போது சில (பல) அரசுத்துறைகளில் 24*7 அலைபேசியில் பேசுவதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்ற அளவில் மன அழுத்தத்தில் பணியாற்றுபவர்களும் கணிசமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள்.
மாற்றம் ஒன்றே மாறாதது என்பதற்கு எத்துறையும் விதிவிலக்கில்லை போலிருக்கிறது.
இணையவழி விண்ணப்பங்கள் பல துறைகளில் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் உங்க மனுவை தேடிப்பார்த்தோம். கிடைக்கலை. மறுபடி கொடுங்க என்பது போன்ற சில விஷயங்கள் குறைந்துள்ளது உண்மை.
மொத்தத்தில் அரசுப்பணி முழுவதும் சொகுசும் கிடையாது. முழுவதும் கடினமும் கிடையாது. துறைகளைப் பொறுத்தும் பணியாற்றுபவர்களின் சூழ்நிலைகள், திறனைப் பொறுத்தும் மாறுபடுகிறது.
(நான் அரசு ஊழியர் அல்ல)