Home » Home 21-09-22

வணக்கம்

இந்த இதழின் சிறப்புப் பகுதிக்கான அறிவிப்பை வெளியிட்டது முதலே, ‘இதில் எழுதவும் அறியவும் என்ன உள்ளது?’ என்று பலர் மின்னஞ்சல் மூலம் கேட்டார்கள். சொகுசு என்பது நபருக்கு நபர் மாறக்கூடிய ஒன்று என்பதில் சந்தேகமில்லை. ஆனால் சொகுசு விரும்பாத மனிதர் என்று யாரும் இருக்க முடியாது. முற்றும் துறந்த முனிவர்கள்கூட உட்காருவதற்குப் புலித்தோல் கிடைத்தால் வேண்டாம் என்று சொல்லுவதில்லை.

எவ்வளவோ விஷயங்களுக்கு நாம் ஏங்கியிருப்போம். நாம் ஏங்கியவை வேறொருவருக்கு எளிதாக வாய்த்திருக்கும். அவருக்கு அதன் அருமை தெரியாமலும் இருக்கலாம். வாழ்க்கையின் அலகிலா விளையாட்டுகளுள் ஒன்றல்லவா இது? இந்த இதழில் அமெரிக்க அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகையின் சொகுசு ஏற்பாடுகள் பற்றி எழுதப்பட்டுள்ள கட்டுரையை வாசித்துப் பாருங்கள். கூடவே அமெரிக்க அதிபர்களுக்கு இருக்கும் கட்டுப்பாடுகளையும் கவனியுங்கள். கூப்பிட்டுக் கொடுத்தாலும் வேண்டாம் அப்பதவி என்று சொல்லிவிடத் தோன்றும்.

இந்த இதழின் இன்னொரு முக்கியமான கட்டுரை, அரசு வேலையைப் பெறுவது பற்றியது. சொகுசு வரையறை தாண்டி இக்கட்டுரை நமக்குத் தெரியப்படுத்தும் உண்மைகள் பல. அரசுப் பணியின் சௌகரியங்கள் குறித்து நாம் நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம். அவை உண்மை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவற்றுக்கு அப்பால் அந்தப் பணியைப் பெறுவது தொடங்கி, நீடித்து இருந்து ஓய்வு பெறுவது வரை கடக்க வேண்டிய கண்டங்களை எவ்வளவு பேர் அறிவார்கள்?

எழுத்தாளர்கள், மாணவர்கள், சுற்றுலாவில் சொர்க்கம் தேடுவோர் என்று பல தரப்பினரின் சொகுசு ஆர்வங்கள் குறித்த கட்டுரைகள் இவ்வாரம் உங்கள் ரசனைக்கு விருந்தாக இருக்கும்.

பிரிட்டிஷ் இளவரசர் என்று பன்னெடுங்காலமாக நம் மனத்தில் நிரந்தரமாக அமர்ந்துவிட்ட சார்லஸ் இப்போது மன்னர் சார்லஸ் ஆகியிருக்கிறார். அவரைக் குறித்து ஜெயரூபலிங்கம் எழுதியுள்ள கட்டுரை மிக நீண்டதொரு வாழ்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தைச் சுருக்கமாகக் காட்சிப்படுத்துகிறது.

உளவாளிகளுள் டபுள் ஏஜெண்டுகளாக இருந்தோர் பலர் உண்டு. ஆனால் ஒரு தேசத்தின் அதிபருடைய மருமகனே வேறொரு தேசத்துக்கு உளவு சொல்லி வந்த கதையை நீங்கள் கேள்விப்பட்டிருக்க முடியாது. அஷ்ரப் மர்வான் என்கிற இஸ்ரேலிய உளவாளியின் கதையைக் கொண்டு நூறு நாவல்கள், ஆயிரம் திரைப்படங்கள் உருவாக்கலாம். திகைப்பூட்டும் தகவல்களைக் கொண்ட ஸஃபார் அஹ்மதின் கட்டுரையை மிகவும் ரசிப்பீர்கள்.

ஒட்டகம் மேய்ப்பவர்களின் வாழ்வைப் படம் பிடிக்கும் நசீமாவின் கட்டுரை, நாம் விரும்பி உண்ணும் சிற்றுண்டிகளின் வரலாறைப் பேசும் முருகு தமிழ் அறிவனின் கட்டுரை, எந்தத் தொழிலிலும் வெற்றி பெறத் தேவையான மிக முக்கியமான அடிப்படைக் குணம் ஒன்றைத் துலக்கிக் காட்டும் ‘பிரிட்டானியா’ உயரதிகாரி அரசு கேசவன் குறித்து ராஜ்ஶ்ரீ செல்வராஜ் எழுதியுள்ள கட்டுரை, உலகப் புகழ்பெற்ற நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளின் ‘ஒரு நாள்’ என்பது எப்படி வடிவமைக்கப்படுகிறது என்பதை விவரிக்கும் ரங்காவின் கட்டுரை - இவையெல்லாம் இந்த இதழுக்கு அழகு சேர்க்கின்றன.

மெட்ராஸ் பேப்பர் உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்து, சந்தா செலுத்தச் சொல்லுங்கள். இது நாம் இணைந்து இழுக்கும் தேர்.

சிறப்புப் பகுதி: சொகுசு

நம்மைச் சுற்றி

உலகம்

டெலிகிராம் அதிபர் கைது : காதல், உளவு, சதி?

டெலிகிராம் செயலியின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான பாவெல் துரோவ் (Pavel Durov) கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அசர்பைஜான் நாட்டிலிருந்து...

உலகம்

பலுசிஸ்தான்: பல்லுக்குள் சிக்கிய பாக்(கு)

உலகின் நீண்ட காலமாக விடுதலைக்குப் போராடும் பிராந்தியங்களுள் பலுசிஸ்தானும் ஒன்று.  ஒரு வகையில் முன்பு இந்தியாவுக்குக் காஷ்மீர் எப்படியோ, அப்படி...

உலகம்

வெற்றிக் கொடி கட்டு : உக்ரைன் திட்டம் 1.0

பலயனீட்சா. வட்ட வடிவில் கிடைமட்டமாக ஒருபுறம் வெட்டிய உக்ரைனிய பிரட் இது. உக்ரைனியர்களைப் போல நடிக்கும் ரஷ்ய வீரர்கள் அல்லது உளவாளிகளைக் கண்டுபிடிக்க...

உலகம்

இலங்கை: களை கட்டும் தேர்தல் திருவிழா

அந்தச் செய்தி ஊடகங்களில் பரவத் தொடங்கிய போது இலங்கையில் இருக்கும் இந்தியத் தூதரகம் அலறிக் கொண்டு அறிக்கைவிட்டது. ‘இதோ பாருங்கள். ஜே.வி.பி கட்சி...

நாலு விஷயம்

நம் குரல்

சிக்கல் இங்கில்லை!

சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில், சில ஆரம்பத் தடுமாற்றங்கள் அந்தப் பாடப்புத்தகங்களில் இருந்தன. சுட்டிக்காட்டப்பட்டதும் உடனடியாக அவை சரி...

தொடரும்

சாத்தானின் கடவுள் தொடரும்

சாத்தானின் கடவுள் – 21

21. பற்று உடலையும் மனத்தையும் வசப்படுத்துவதன் மூலம் சித்தத்தை சிவத்தில் நிலைநிறுத்த வழி சொன்ன சித்தர்களைப் பற்றிப் பார்த்துக்கொண்டிருந்தோம். தவிர்க்க முடியாமல் இந்த இடத்தில் சித்தருக்கு எதிர்ப்பாதையில் சென்ற புத்தரைச் சிறிது கவனிக்க வேண்டியிருக்கிறது. கவனம். நாம் பவுத்தத்துக்குள் செல்லப் போவதில்லை...

Read More
aim தொடரும்

AIM IT – 21

நான் பேச நினைப்பதெல்லாம்… ஏ.ஐயின் தாய்மொழி எது? சிலருக்கு இக்கேள்வியே பொருளற்றதாகத் தோன்றலாம். ஆனால் நீங்கள் ஓர் ஏ.ஐ ஆர்வலர் என்றால் இவ்வினா சுவாரசியமானது. ஏ.ஐ மனிதர்களின் மொழிகளில் எழுதுகிறது. பேசுகிறது. அப்படியென்றால் மனிதனுக்கு இருப்பது போலவே ஏ.ஐக்கென்று ஒரு தாய்மொழி உண்டா? அதற்கான...

Read More
உரு தொடரும்

உரு – 21

21 ஆட்சியதிகாரத்தின் மொழி தூரத்தில் தெரியும் வெளிச்சம் நம்பிக்கையைக் கொடுக்கும். போய்ச் சேர்ந்துவிட்டதாக எண்ணிவிடலாகாது. மலேசியத் தமிழ்ப் பள்ளிகளில் முரசு அஞ்சல் நிறுவிய திட்டம் அச்சமயத்தில் கிடைத்த பெரிய வாய்ப்பு. அதைவிடச் சிறிய திட்டப்பணிகள் சிலதும் முரசு சிஸ்டம்ஸ் செய்தது. ஒரு சில மாதங்களுக்கு...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 116

116 நேரம் ஐஸ் ஹவ்ஸ் மசூதி சந்திப்பில் இருக்கும் டீக்கடையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில் ரமேஷ் சொன்னான், ‘என் ஃபிரெண்டு சேகர் உன்னைப் பத்தி விசாரிச்சாண்டா’ என்று. ‘சேகரா. அது யாரு.’ ‘அதாண்டா உங்க ஆபீஸ்ல பெரிய போஸ்ட்ல இருக்கான். ஒரு யூத் கேம்ப்ல மீட் பண்ணினேன்னு சொன்னேனே. நீ கூட, உங்க...

Read More
G தொடரும்

G இன்றி அமையாது உலகு – 21

21. எதேச்சாதிகாரமும் எதிர்வழக்குகளும் கூகுள் வெற்றிப்படிகளில் ஏற ஏற, அதன் புகழ் மரத்தில் கற்களும் தொடர்ந்து வீசப்பட்டுக்கொண்டுதான் இருந்தன, இருக்கின்றன. வழக்குகளின் எண்ணிக்கையும் குறைந்தபாடில்லை. பெரும்பாலும் அவை நீர்த்துப்போய்விடுகின்றன என்பதால், முன்பெல்லாம் முக்கியத்துவம் கொடுத்து விரிவாக...

Read More
தொடரும் பணம்

பணம் படைக்கும் கலை – 21

21. நெருக்கடி நேர நிதி வரும் நவம்பர் மாதத்தில் இந்தியக் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்குச் சென்று பல போட்டிகளில் விளையாடவுள்ளது. இதற்கெனச் சுமார் 16 பேர் கொண்ட ஓர் அணியைத் தேர்ந்தெடுக்கப்போகிறார்கள். 16 பேரா? பொதுவாக ஒரு கிரிக்கெட் அணியில் 11 பேர்தானே விளையாடுவார்கள்? கூடுதலாக 5 பேர் எதற்கு...

Read More
error: Content is protected !!