16. ஒலியும் ஒளியும்
அழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகளுள் ஒன்றான தெருக்கூத்து பற்றி நாம் அறிவோம். பெரும்பாலானோர் உங்களது சிறுவயதில் திருவிழா சமயத்தில் தெருக்கூத்து பார்த்திருப்பீர்கள். இப்போதும் பல கிராமப் பகுதிகளில் திருவிழா நேரத்தில் தெருக்கூத்து நடத்தப்படுகிறது. தெருக்கூத்துக் கலைஞர்கள் ஒப்பனை செய்து கொள்ளும் விதமே மற்ற மேடை நாடக நடிகர்களை விடவும் வித்தியாசமாக இருக்கும். அவர்கள் முகத்தில் அதிகப்படியான வண்ணங்களைப் பூசிக் கொள்வார்கள். கண்களைப் பெரிதாகக் காட்டுவதற்காகக் கண்களைச் சுற்றி அடர்த்தியாக மையிட்டுக் கொள்வார்கள். முகத்தில் சாயங்களைப் பூசிக் கொள்வதில்லாமல் உடையும் பளபளப்பாக பல வண்ணங்களைக் கொண்ட உடையாக இருக்கும்.
Add Comment