18. மந்திரங்கள்
சித்தர்களின் வார்த்தைகள் அர்த்தம் நிறைந்தவை. பெரும்பாலான மனிதர்கள் சித்தர்களின் வார்த்தைக்கு அர்த்தம் புரிந்துகொள்ள முயற்சிப்பதைவிட தங்களின் சோம்பேறித்தனத்திற்கும் ஆணவத்திற்கும் சாட்சியாகச் சித்தர்களின் வார்த்தையைப் பயன்படுத்துவார்கள்.
‘மனமது செம்மையானால் மந்திரம் தேவையில்லை’ என்ற ஒரு சித்தர் வரிகளை பிடித்து வாதம் செய்யும் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்குச் செளகரியமான வார்த்தையை எடுத்துக்கொண்டு, ‘பாருங்கள் சித்தரே சொல்லிவிட்டார் மந்திரம் தேவை இல்லை’ என்பார்கள். மனம் அது செம்மையானால் என்ற பதம் அவர்களுக்குக் கண்களில் படுவதில்லை.
Add Comment