டூகே கிட்ஸ் என்று எளிமையாகவும் ஈராயிரக் குழவிகள் என்று கஷ்டப்பட்டும் அழைக்கப்படும் இந்தத் தலைமுறையினர் இழந்தவற்றில் முக்கியமான ஒன்று சினிமாப் பத்திரிகைகள்.
இன்று பத்திரிகைகளில் சினிமா முக்கியத்துவம் பெற்று வந்தாலும், அவற்றில் வருபவையெல்லாம், ‘புதுசா ஒரு சப்ஜெக்ட், யாருமே சொல்லாததைச் சொல்லியிருக்கேன்’ என்று இயக்குநர்கள் தரும் பேட்டிகளும், நாயக, நாயகியர் இதேபோன்று தரும் பில்டப் பேட்டிகளும்தான்- அதுவும் பட ரிலீசுக்கு ஒரு வாரம் முன்புதான் இப்படி ஒரு படம் தயாராகி வருவதே சாதாரண ரசிகனுக்குத் தெரியும்.
எம்.ஜி.ஆர் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் வந்திருந்தால் காஸ்டிங் எப்படியிருந்திருக்கும் என்ற கற்பனை விரிகிறது.