கருங்கற்களால் ஆன தூண்கள், கருங்கல் சிற்பங்கள், அரையிருட்டான கருவறை, சுவரெங்கும் அழுக்கு, குறுக்கே பறக்கும் வவ்வால்கள், கதவெல்லாம் எண்ணெய், கை வைக்கும் இடமெல்லாம் கரி, நூற்றுக் கணக்கான ஆண்டுகளின் பாரம்பரியம், வரலாற்று நெடி என்று பழமை பூசிய புராதனமான ஆலயங்கள் பலவற்றுக்குப் போய் வந்திருப்பீர்கள்.
ஒரு மாறுதலுக்கு கார்ப்பரேட் ஸ்டைலில், தரையில் பட்டுக் கம்பளம் விரித்த பிரகாசமான, பிரம்மாண்டமான பளிங்கு ஹாலில் கொலுவீற்றிருக்கும் தெய்வங்களைத் தரிசித்ததுண்டா..? ஹரே கிருஷ்ணா கோயில்கள் கொஞ்சம் பளபளப்பானவைதாம். ஆனால் அதைத் தூக்கிச் சாப்பிடும் ஒரு கோயில் துபாயில் உருவாகிவிட்டது.
Add Comment