மல்லிகார்ஜூன் கார்கே 6825 வாக்குகள் வித்தியாசத்தில் சசி தரூரை வென்று இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அசோக் கெலாட், திக்விஜய் சிங், கேஎன் திரிபாதி மற்றும் சசிதரூர் எனப் பல பெயர்கள் அடிபட, கடைசிக்கட்டத்தில் களமிறங்கினார் மல்லிகார்ஜூன் கார்கே. கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகளுக்குப் பிறகு நேரு குடும்பத்தினரல்லாத மல்லிகார்ஜுன் கார்கே தலைவராகியிருக்கிறார். காங்கிரஸ் கட்சியில் அடிப்படைத் தொண்டராக வாழ்க்கையைத் தொடங்கி கட்சித் தலைவர் பதவியை அடைந்திருக்கிறார். கார்கேவினுடைய அரசியல் வாழ்க்கைப் பயணம் மலர்களும் முட்களும் நிரம்பிய பாதையாகவே இருந்திருக்கிறது.
//சிறுவனாக இருந்த கார்கேவினுடைய மனதில் அந்தச் சம்பவம் மதச்சார்பின்மையை விதைத்தது//
வழக்கமாக மதவாதத்தை விதைக்கக்கூடிய சம்பவம் இல்லையா . கார்கே காங்கிரசை சிறப்பான எதிர்க்கட்சியாக கொண்டு வந்தால் மகிழ்ச்சிதான்