கொழும்பில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றும் ரும்மான் தருகிற இந்த ஆலோசனைகள், ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல; பெற்றோருக்கும் பொருந்தும்.
எனது மாணவர்களிடத்தில் யாராவது “உங்களுக்கு மிகப் பிடித்த டீச்சர் யார்” என்று கேட்டால் தயக்கமின்றி அவர்கள் என் பெயரைச் சொல்லி விடவேண்டும்.
மிகப் பெரிய திட்டம்தான். சும்மாவெல்லாம் சொல்ல மாட்டார்கள். குறிப்பாக எடுத்ததற்கெல்லாம் கூகுளிடம் கேட்கும் இந்த இரண்டாயிரமாம் ஆண்டுக்குப்பின் பிறந்த ‘Z’ மற்றும் ‘ஆல்பா’ தலைமுறையினர், நம்மையெல்லாம் ஆசிரியராக ஏற்றுக் கொள்வதே சாதனைதான்.
அவர்களை மயக்க அறுபத்திநான்கு கலைகளோ, யூடியூப் சொல்லும் பதினைந்து நுட்பங்களோ சரிப்பட்டு வராது. அவர்கள் பாணியிலேயே சென்று பிடிக்க வேண்டும்.
” இருந்த இடத்தில் அப்படியே அமர்ந்து, தியான நிலை ஞானிகள் போல தரைக்கு நோகாத வண்ணம் திருவாய் மொழிவதெல்லாம் எப்போதோ ஒழிந்து போன சங்கதிகள். இங்கே அது செல்லாது. நாமும் அசைய வேண்டும். அவர்களையும் அசைக்க வேண்டும். வகுப்புக்கள் நீயா நானா மேடை போல இருக்க வேண்டும். கோட் அணியாவிட்டாலும் கோபிநாத்தைப் போல ஒலிவாங்கியை மாற்றி மாற்றிக் கொடுக்க வேண்டும்.”
All of the ideas for teachers (facilitators) in the modern world are good ones.
மிக அருமை..உண்மை..என் பத்து வயது பேத்தியை அருகில் இருந்து பார்க்கிறேன்.2K கிட்ஸ் வேறலெவல் தான்.பெற்றோர்களுக்கு நல்ல டிப்ஸ்.