ஒருவரது வாழ்வில் அவர்களது பள்ளி / கல்லூரிக் காலங்களில் படிப்பிற்காக வாங்கப்படும் கல்விக் கடனில் தொடங்கும் இஎம்ஐ எனப்படும் மாதாந்திரத் தவணைத் திட்டம், அவர்களின் அடுத்த தலைமுறை வரை தொடர்ந்துகொண்டே இருக்கும். வேலை வந்ததும் கல்விக் கடனுடன் வண்டி வாகனம் வாங்கும் இஎம்ஐயும் சேரும். அதன்பின் திருமணம். குடும்பம் என்று வந்துவிட்டால் வீடு வேண்டும் அல்லவா..? அடுத்த வரிசையில் வீட்டுக் கடனும் அதற்கான இஎம்ஐயும் வரும். குடும்பம் விரிவடைந்து விட்டால் கார் வாங்கவேண்டும். இதற்கு முன்பு எடுத்த வண்டியின் இஎம்ஐ முடிகிறதோ இல்லையோ, புதுக் காருக்கு இஎம்ஐ கட்டத் துவங்க வேண்டும். இப்படி வீட்டு உபயோகப் பொருள்கள், சுற்றுலா, விழாக்கள் என்று கடன்கள், கிரெடிட் கார்டு தேய்ப்புகள் வரிசைகட்டிக் கொண்டிருக்கும்போதே, பிள்ளைகளின் கல்விக்காகக் கடன் வாங்க வேண்டிய சமயம் வந்துவிடும். அப்படியே அடுத்த சுழற்சி துவங்கிவிடும். இந்த இஎம்ஐ சுழலில் சிக்கிக்கொண்ட பெரும்பாலானோர் அதிலிருந்து வெளிவருவது கடினம்.
இதைப் படித்தீர்களா?
பாகம் 2 51. ஆயுதம் இருள் முற்றிலும் விலகியிருக்கவில்லை. இரவெல்லாம் நடந்த களைப்பில் சிறிது அமர்ந்து இளைப்பாறலாம் என்று தோன்றினாலும், உடனே வேண்டாம்...
51. பாமரரும் மற்றவரும் காந்தியின் சென்னை வருகையைப்பற்றிப் பல இதழ்களும் செய்தித்தாள்களும் கட்டுரைகளை வெளியிட்டிருந்தன. அவற்றில் காந்தியின்...
இன்றைய கால கட்டத்தில் அவசியமான அறிவுரை.உணர வேண்டிய உண்மை.