23. திறக்கட்டும் கதவுகள்
எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8.8 கிமீ. அதற்கும் மேல் பயணிக்க இடமில்லை. சூப்பர் ஸ்டாரின் வாக்குப்படி “சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு” என்றால் மனிதன் சென்ற அதிகபட்சத் தொலைவு மூன்று லட்சத்து எண்பத்து நாலாயிரத்து நாநூறு கிலோமீட்டர். இது பூமியிலிருந்து நிலவுக்கான தூரம். எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட நான்காயிரம் இருக்கும். நிலவுக்குச் சென்று வந்த மனிதர்களின் எண்ணிக்கை பன்னிரண்டு. விண்வெளிக்குச் சென்றவர்களின் எண்ணிக்கை 600 . மேல்நோக்கிப் பயணிக்க இத்தனை ஆர்வம் காட்டும் மனிதர்கள் பூமிக்குக் கீழ்நோக்கிப் பயணிக்க அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை. ஏனென்றால் அந்தப் பயணம் கடலுக்குள் செல்ல வேண்டியது.
Add Comment