நிறையப் பேருக்குக் காலையில் செய்தித்தாள் படித்துக்கொண்டே காபி குடித்தால்தான் திருப்தி இருக்கும். காபி குடிப்பது அல்லது செய்தித்தாள் வாசிப்பது ஏதாவது ஒன்றை மட்டும் செய்தால் அந்தக் காலை நேரத்துப் புத்துணர்ச்சி மறைந்துவிடும்.
காலையில் காபி குடிக்கும் நேரத்திற்குள் வீட்டிற்கு வந்துவிடும் செய்தித்தாள் போடுபவர்களின் வாழ்க்கை, குடும்பப் பின்னணி, குறைந்தபட்சம் அவர்களுடைய பெயர் கூட அதிகம் பேருக்குத் தெரியாது. அவர்களுடைய செல்பேசி எண் கூட நிறைய பேரிடம் இருக்காது. அப்படி இருந்தாலும் உடனே கண்டுபிடிக்கும் வசதிக்காக நியூஸ் பேப்பர் என்று சேமித்திருப்போம்.
ஆனால் அவர்களுக்கு நம்மைத் தெரியும். நன்றாகத் தெரியும். குடும்ப ஜாதகமேகூட அறிந்திருப்பார். பல்லாண்டுகளாக நம்மைக் கவனித்திருப்பார். நமக்குப் பிடித்தது, பிடிக்காதது முதல் நாம் படித்தது, பணியாற்றுவது வரை அவருக்கு அத்துபடியாக இருக்கும்.
ஒரு பேப்பர் போடும் நபரை என்றைக்காவது நின்று உற்றுப் பார்த்திருக்கிறோமா? நான்கு வார்த்தை பேசியிருக்கிறோமா?
வீடுகளுக்குச் செய்தித்தாள் வினியோகிக்கும் தொழிலில் இருக்கும் மணிகண்டனைச் சந்தித்தோம்.
Add Comment