சி.சுப்பிரமணிய பாரதி
‘சக்திதாசன்’ என்ற பெயரில் பாரதியார் எழுதிய கட்டுரை இது. ரா.அ.பத்மநாபன் தொகுத்த ‘பாரதி புதையல் பெருந்திரட்டு’ நூலில் உள்ளது.
பாரதியார் புதுவையை விட்டு 1918 நவம்பரில் கிளம்பி பிரிட்டிஷ் தமிழ்நாட்டினுள் நுழைந்ததும் கடலூரில் கைதாகி, 24 நாட்கள் சிறைவாசம் அனுபவித்து, விடுதலையாகி, தன் மனைவியின் ஊரான கடயத்துக்கு நேரே சென்றார். அடுத்த இரண்டாண்டுகள் கடயத்தில் இருந்துகொண்டு எட்டயபுரம், காரைக்குடி, சென்னை முதலிய ஊர்களுக்குச் சென்று வருகிறார். பின்னர் 1920 நவம்பரில் சென்னைவாசி ஆகிறார்.
கடயத்தில் இருந்த சமயம் இக்கட்டுரையை அவர் எழுதியிருக்க வேண்டும். இது முதன்முதலில் ‘சுதேசமிததிரன்’ நாளிதழிலும், பின்னர் 1936-ல் பரலி சு.நெல்லையப்பர் நடத்தய ‘லோகோபகாரி’ வாரப் பதிப்பிலும் வெளியானது.
இக்கட்டுரையானது கடயத்தின் இயற்கை அழகையும், அவ்வூரில் பாரதியார் வசித்த தனித்த, ஒதுப்புறமான இல்லத்தையும், தெருவில் காணக்கூடிய கழுதைகளையும், ஊரின் சிறுமை மனிதர்களையும் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. கடயம் தென்காசிக்கு முன்னதாக ஆறேழு மைலில் இருக்கிறது. குற்றாலத்துச் சாரல் இங்கும் பிரசித்தம்.
(புதுவை – வேதபுரம்; கடயம் – ஆகமபுரம். பாரதியார் – சக்திதாசன்.)
நான் பிறந்தது முதல் தென்காசிவாசி தான்.சாரல் பிரசித்தம்.இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும்.மலை மழை அருவி ஆறு வயல் என செழுமை தான்.பாரதியும் கடையத்தில் வசித்து உணர்ந்து எழுதியுள்ளார்.அருமை.
வணக்கம் ஐய்யா.
இந்த வார பகுதிகள் அனைத்தும் மிக அருமை.