வ.உ. சிதம்பரம் பிள்ளை
வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை என்கிற வ.உ.சி. (செப்டம்பர் 5 1872 – நவம்பர் 18 1936) தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் எனும் பன்முகத் தன்மை பெற்றிருந்தார். பிரித்தானியக் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். இவர் தொடங்கிய சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கடல்வழிப் போக்குவரத்தை மேற்கொண்டது. பிரித்தானிய அரசால் தேசத்துரோகியாகக் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அவரது வழக்கறிஞர் உரிமமும் பறிக்கப்பட்டது.
இக்கட்டுரை, ஜேம்ஸ் ஆலன் எனும் மேற்கத்திய அறிஞரால் எழுதப்பட்டு வ.உ.சியால் மொழியாக்கம் செய்யப்பட்டது.
Add Comment