27 கரையும் கடல்
ஆபீஸிலிருந்து கிளம்பிய சைக்கிள், டிரைவ் இன்னுக்காய் திரும்பாமல் நேராகப் போயிற்று. எப்போது இருட்டிற்று என்று ஆச்சரியமாக இருந்தது. எதிரில் காந்தி சிலை தெரிந்ததும் ராணி மேரி கல்லூரிக்காய் திரும்பி பீச் ரோடில் போகத் தொடங்கிற்று. விவேனந்தர் இல்லத்தைத் தாண்டி, பெரிய பெரிய தூண்களுடன் இருந்த பல்கலைக் கழக மெரினா வளாக சிவப்புக் கட்டடம் வந்ததும் தானாக நின்றுவிட்டது.
வண்டியை காம்பவுண்டின் ஓரத்தில் நிறுத்திப் பூட்டிவிட்டு, படிகளில் ஏறி, மூடியிருந்த கட்டடத்தின் வாயில் முன், மேடைபோல் இருந்த வராந்தாவில் நின்று எதிரே தெரிந்த கரையையும் கடலையும் பார்த்தான். தூரத்தில், மீட்டிங் நடக்கிற சீரணி அரங்கம் தெரிந்தது. வாரநாள் ஆகையால் பீச்சில் பெரிய கூட்டம் இல்லை.
கடைசியாக அங்கு வந்தது, நினைவுக்கு வந்தது.
Add Comment