நம் இகவுக்குச் சிறுவயதிலிருந்தே அடியோடு பிடிக்காத விஷயம் ஒன்று உண்டென்றால், அது வீடுகளில் நாய் வளர்ப்பது. அந்த வர்க்கத்தைத் தனது முதல் எதிரியாக என்றும் நினைக்கிறான். அதற்குப் பல காரணங்கள் உண்டு.
சிறுவன் இகவின் பக்கத்து வீட்டுக்காரரொருவர் நாய் வளர்த்து வந்தார். அப்புத்திசாலியானவர், நாயைத் தன் வீட்டுக்குள் அனுமதிக்காமல் காம்பவுண்டுக்குள் கட்டுவார். அஃது வினாடி பிசகாமல் தெருவில் யார் அந்த வீட்டுக் கதவைக் கடந்து சென்றாலும் தெருவுக்கே கேட்பது போல் ‘லொள்’ளித் தள்ளும். அதிலும் குறிப்பாக இகவைக் கண்டால் ஹை டெஸிபலில். அதன் சொந்தக்காரரின் முகமும், அவர் செல்லப் பிராணியின் முகமும் ஒன்றேபோல் இருப்பதாக இகவுக்கொரு அசைக்கவியலாத கருத்து. எனவே, அவருக்கு ‘நாய்மூஞ்சி மாமா’ என்றோர் பட்டப் பெயர் வைத்திருந்தான்.
Add Comment