மின்னும் கனகமலையைத் திருமகளாய்க் கண்டு தொழுது தகுதியானவருக்கு அதைத் தானமாகக் கொடுக்க உழைத்துத் தளர்ந்த பார்த்தன், அதை உலோகமாக மட்டுமே உணர்ந்து ஒரு கணப்பொழுதில் தானமாய்த் தந்த கர்ணன் ஆகியோரின் செயல்கள் பற்றிய மகாபாரதக்கதை ஒன்றுண்டு. தங்கத்தை அன்று முதல் இன்று வரை மற்றக் கனிமங்கள் அல்லது உலோகங்கள் போல வெறும் உலோகமாகப் பார்ப்பவர்கள் மிகச் சிலரே. தொட்டதெல்லாம் தங்கமாக வேண்டும் என்று வேண்டிய மைதாஸ் முதல் தங்கம் செய்யத் தெரிந்த சித்தர்கள் வரை பல கதைகளைப் படித்திருக்கிறோம். ஆனால், தங்க வேட்டை நடந்த அமெரிக்கச் சரித்திர நிகழ்வுகளும் அதைத் தொடர்ந்து அமெரிக்காவிற்கு உலகெங்கிலும் இருந்து மக்கள் குடிபெயர்ந்ததும் பலருக்குப் புதியவை. இண்டியானா ஜோன்ஸ் திரைப்படக்கதை போல இருந்தாலும், இவை வரலாற்று உண்மைகள்.
இதைப் படித்தீர்களா?
நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பு என்பது காலம்தோறும் தேவைக்கேற்பச் செய்துகொள்ளப்பட வேண்டிய ஓர் எளிய வசதி. இதற்கு முன்பு இந்திரா காந்தியின்...
ஏறுமுகத்தில் ஏஐ பதிலின் தன்மை சொல்லப்படும் தொனியில் உள்ளது. ஒரே பதிலைப் பல்வேறுவிதங்களாகச் சொல்லமுடியும். நண்பருக்கு நாம் எழுதும் கடிதமும், அரசு...
Add Comment