‘நீர்த்துப் போன மாண்டஸ் புயலை பேரிடர் என பில்டப் செய்வதா?’ என்று கேட்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. கூடவே,‘கஜா புயல், கொரோனா போன்ற பேரிடர்களைக் கையாண்டு சாதனை படைத்தது அதிமுக அரசு’ என்றும் பெருமிதப்பட்டிருக்கிறார். நல்லது.
ஆனால், 2015-ம் ஆண்டு பெய்த பெருமழையின்போது, எந்தவிதமான முன்னறிவிப்புமின்றி, இரவோடிரவாகச் செம்பரம்பாக்கம் ஏரி மல்லாக்கத் திறந்து விடப்பட்டு, சென்னை நகரையே வெள்ளத்தில் மூழ்கடித்த அம்மா ஆட்சி பற்றி அவர் மூச்சுக் காட்டவில்லை. அப்போது பதினெட்டு லட்சம் மக்கள், வெள்ளம் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறித் தவித்ததெல்லாம் எடப்பாடிக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. காரணம், தம்முடைய ஆட்சியில் நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டையே அவர் டிவியில் பார்த்துத்தானே தெரிந்து கொண்டார். பாவம், முதல்வராக இருந்த காலத்தில்கூட அவரும் நம்மைப் போன்ற ஒரு சாதாரண பொதுஜனமாகத்தான் இருந்திருக்கிறார் என்பதால் அவரை விட்டுவிடுவோம்.
Add Comment