சக்கரங்கள் இல்லாமல் ஓடு தளத்தில் சிராய்த்து கொண்டே சென்ற ஒரு விமானம் அங்கிருந்த ஒரு சுவரின் மீது மோதி வெடிக்கிறது. 179 பேர் இறந்துவிட, இருவர் மட்டும்...
வணக்கம்
இந்த இதழின் சிறப்புப் பகுதி, தங்கம் பற்றியது. சரித்திர காலம் தொடங்கி, சமகாலத் தங்க வேட்டைகள் வரை இதில் அலசப்படுகிறது. தங்கத்துக்குத் தொடர்பில்லாவிட்டாலும் ராசிக் கற்கள் பற்றிய ருசிகரமான கட்டுரை ஒன்றும் அப்பகுதியுடன் இணைவதன் பொருத்தம், அனைத்தையும் படித்து முடிக்கும்போது புரியும்.
மாணவர்களுக்கு செருப்பு தைத்துத் தரும் இலங்கையைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவரைக் குறித்து ரும்மான் எழுதியுள்ள கட்டுரை மிக முக்கியமானது. ஆசிரியர்-மாணவர் உறவு இங்கே சட்டபூர்வமாகிக்கொண்டிருக்கும் காலம். பிள்ளைகளைத் திட்டக் கூடாது, அடிக்கக் கூடாது, கண்டிக்கக் கூடாது; வெறுமனே வகுப்புக்கு வந்து பாடம் எடுத்துவிட்டுப் போனால் போதும் என்பது கிட்டத்தட்ட மாநிலம் முழுதும் நடைமுறைக்கு வந்துவிட்டது. இந்த சௌகரியத்தில் சில மாணவர்கள் வரம்பு மீறி நடந்துகொள்ளும் செய்திகளும் அடிக்கடி வருகின்றன. கண்ணுக்குத் தெரியாமல் ஒரு தலைமுறையை நாசம் செய்துகொண்டிருக்கிறோம். பலனை அறுவடை செய்யும்போது பாவத்தின் கனம் புரியும்.
அது ஒரு புறம் இருக்க, மேற்படி இலங்கை ஆசிரியர் தனது அன்பான ஒரு கூடுதல் செயல்பாட்டின் மூலம் மொத்த மாணவர் சமுதாயத்தையும் தன்வயப்படுத்தியிருக்கிறார். இப்படி ஒரு ஆசிரியரிடம் நாமும் படிக்க மாட்டோமா என்று இலங்கை எங்கும் வாழும் மாணவர்கள் ஏங்குமளவுக்கு அவரது பெயரும் செயலும் பிரபலமாகியிருக்கிறது.
ஜி20 மாநாடு குறித்து பாண்டியராஜன் எழுதியுள்ளதும் சவூதி அரேபியாவில் நடைபெற்ற சீன-அரேபிய மாநாடு பற்றி நஸீமா எழுதியுள்ளதும் ஒன்றுடன் ஒன்று நேரடித் தொடர்பில்லாவிட்டாலும் உற்று நோக்கினால் சில பொருத்தங்களைக் கொண்டிருப்பதை உணர முடியும். தேசங்களிடையே மாறி வரும் உறவு நிலைகளைப் பொருளாதாரக் காரணங்களே தீர்மானிக்கின்றன. கைகுலுக்கல்களுக்குப் பின்னால் உள்ள கணக்குகள் புரிந்துவிடுமானால் நாம் வாழும் காலம் எத்தனை அபாயகரமானது என்பது விளங்கிவிடும்.
இந்த இதழின் மிகச் சிறந்த அம்சமாக பீட்டர் ஹாக்ஸின் ‘லயோலா என்ற பெரும்பாம்பின் கதை’ சிறுகதையை (ஆங்கில வழி மொழிபெயர்ப்பு: சுகுமாரன்) முன்வைக்கிறோம். படித்து முடிக்க ஐந்து நிமிடங்கள்கூட ஆகாது. ஆனால் ஒரு மாபெரும் அவல சரித்திரம் அக்கதைக்குள் புதைந்திருக்கிறது. இப்படிக்கூட எழுத முடியுமா என்று திகைக்கச் செய்யும் சிறுகதை. கதை குறித்த மாமல்லனின் சிறப்புக் கட்டுரையைக் கையோடு வாசியுங்கள். ஒரு கலைப்படைப்பை எப்படிப் புரிந்துகொள்வது, எப்படி ரசிப்பது என்று அது சொல்லித் தரும்.
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.
அயல்
சிறப்புப் பகுதி: என் தங்கமே!
கதம்பம்
தமிழ்நாடு ஆளுநர் சட்டமன்றத்துக்கு வருகிறார் எனில் நிகழ்ச்சி நிரலில் அவர் வெளிநடப்பு செய்வதும் உண்டென்பது சமீப கால வழக்கமாகியுள்ளது. ஒவ்வோராண்டும்...
2019ஆம் ஆண்டு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டபிறகு காஷ்மீரில் தீவிரவாதச் செயல்கள் எழுபது சதவிகிதம் குறைந்திருக்கிறது. சட்டப்பிரிவு 370 தான் மக்கள்...
ஏர் இந்தியா தனது உள்நாட்டுப் பயணிகளுக்கு இன்டெர்னெட் சேவையை இந்த ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அறிமுகப்படுத்தியுள்ளது. “நீங்கள் யாரும் உங்கள் அலைபேசியை...
விபத்து நடந்து நாற்பதாண்டுகளுக்குப் பிறகு போபால் யூனியன் கார்பைடு தொழிற்சாலையிலிருந்து நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் பணி ஜனவரி கடந்த வாரம் தொடங்கியது...
தொடரும்
ix. ஐரோப்பா எகிப்து, சீனா, துருக்கி, இந்தியா, ஜப்பான், ஈரான் என அனைத்து நாடுகளும் தங்கள் பாரம்பரிய சண்டைக்கலையை நவீனப்படுத்தின, சில சண்டைக்கலைகளை மீட்டெடுத்தன. அதைப்போலவே ஐரோப்பிய நாடுகளும் தங்கள் சண்டைக்கலைகளை ஒருங்கிணைத்தன. அந்த ஒருங்கிணைப்பு HEMA என அழைக்கப்படுகிறது. ஹிஸ்டாரிகல் ஈரோப்பியன்...
39. ஆபத்து Vs பலன்கள் ‘கடலைவிடத் துறைமுகம்தான் பாதுகாப்பானது. ஆனால், கப்பல் துறைமுகத்தில் தங்குவதற்காகக் கட்டப்படவில்லை’ என்று ஓர் ஆங்கிலப் பொன்மொழி உண்டு. இதன் பொருள், ஒரு செயலைச் செய்வதற்குமுன் அதில் இருக்கக்கூடிய ஆபத்துகளைமட்டும் பார்க்கக்கூடாது. அதைச் செய்வதன்மூலம் வரக்கூடிய...
மலைகளின் ராணி ருவாண்டா நைல் நதியும் அதன் பல்வேறு கிளை நதிகளும் ஓடும் நாடு. ருவாண்டா என்றால் ஆயிரம் மலைகள் கொண்ட நாடு. அழகான மலைப் பிரதேசம். நீர் வற்றிப்போனால், பயிர்கள் வாடி வறுமை தாண்டவமாடும். 50 சதவீத மக்கள் வறுமைக்கோட்டின் கீழே உள்ளனர். 20 சதவீதம் கீழ் மத்தியத்தரக் குடும்பங்கள் உள்ள ஏழை நாடு...
குட்டிச்சாத்தான் குரளி(லி) வித்தை குட்டிச்சாத்தானுக்குக் குரல் உள்ளது. ஆம். சில குட்டிச்சாத்தான்களால் பேசவும் இயலும். சராசரி மனிதர்களைப் போலவே அதனுடன் உரையாடலாம். இது “வாய்ஸ் மோட்” என அழைக்கப்படுகிறது. முதலில் பேச்சு வந்த குட்டிச்சாத்தான் சாட்ஜிபிடி. ஆரம்பத்தில் “இது ஒரு மாதிரி செயற்கையா இருக்கே…”...
காட்டிக்கொடுக்கும் காலடிகள் அந்தச் சம்பவம் நடந்து சுமார் எட்டாண்டுகள் கடந்துவிட்டன. வேனிற்கால விடியற்பொழுதொன்றில் மெல்லமெல்ல வெப்பமேறிக்கொண்டிருந்தது நுங்கம்பாக்கம் ரயில் நிலையம். அதற்கேற்றாற்போல், இளைஞனொருவன் இளம் பெண்ணொருத்தியிடம் கோபாவேசமாக வாதம் செய்துகொண்டிருந்தான். சட்டென்று...
9. கருத்துப் பிரசங்கம் பொதுவாக நமது கலாசாரத்தில் மக்கள் மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடுவதற்குத் தமக்கு உரிமை இருப்பதாகவே எண்ணுகிறார்கள். அது யார் கொடுத்தது என்றுதான் புரிவதில்லை. அதனாலேயே பல சிக்கல்களுக்கும் மன உளைச்சல்களுக்கும் மற்றவர்களை உள்ளாக்குகிறார்கள். இப்படித் தலையிடுபவர்களை இரண்டு...