மு.சி.பூர்ணலிங்கம் பிள்ளை ( 1866 – 1947)
அந்த மாணவர் முதுகலை வகுப்பில் படிக்கிறார் (அந்நாட்களில் இது எம்.ஏ -இது பிறகு இண்டர்மீடியட் வகுப்பானது). வருடம் சற்றொப்ப 1880’களில் இருக்கலாம். தனக்குப் பாடமாக இருந்த சேக்சுபியர் நாடகம் ஒன்று மாணவரை மிகவும் கவர்கிறது. அதற்கு நல்ல உரை ஒன்றை எழுதி வெளியிட்டால் வரவேற்புக் கிட்டும் என்று மாணவருக்குத் தோன்றுகிறது. ஆனால் இன்னொரு தயக்கமும் வருகிறது. ஒரு மாணவராக அதை எழுதினால் அதன் உள்ளடக்கத்துக்குத் தேவையான, மரியாதையுடன் அந்த நூல் அணுகப்படாது என்றும் தோன்றுகிறது. என்ன இருந்தாலும் ஒரு மாணவன் எழுதிய நூல்தானே’ என்ற முன்முடிவுடன்தான் கற்றோர் நூலை அணுகுவார்கள் என்று அந்த மாணவர் நினைக்கிறார்.
Add Comment