34. சௌரி சௌரா
பஞ்சத்தில் வாடிய பர்தோலி விவசாயிகள் மீது பிரிட்டிஷ் அரசாங்கம் கருணை காட்ட மறுத்தது மட்டுமில்லாமல், வரியையும் அநியாயமாக உயர்த்தியது. அதனால் விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
இதற்கு முன்பாக 1918-19 காலகட்டத்தில் கேடா மாவட்டத்திலும், (இன்றைய குஜராத்) சம்பரண் மாவட்டத்திலும் (இன்றைய பீகார்) விவசாயிகள் இதே போன்ற பிரச்சனையைச் சந்தித்தபோது, காந்திஜியின் வழிகாட்டுதலின்படி சர்தார் படேல், ராஜேந்திர பிரசாத் ஆகியோரின் முன்னெடுப்பில் விவசாயிகளின் போராட்டம், வரிகொடா இயக்கமாகப் புதிய பரிமாணம் பெற்றது.
Add Comment