பொதி சுமக்கும் மனிதர்
1991-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்திலுள்ள ஆஸ்டின் நகரத்தில் ராஜேஷ் எனும் இந்திய இளைஞன் சோர்வுடன் தனது அபார்ட்மெண்டிற்குள் நுழைந்தான். அவனது சோர்வுக்கான காரணம் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படித்து முடித்து கிட்டத்தட்ட மூன்று மாதங்களாகிறது. ஆனாலும் இதுவரை வேலை எதுவும் கிடைக்கவில்லை. இண்டர்வியூக்கள் பல அவன் கண்டிருக்கிறான். வேலை கிடைக்கும் என்னும் நம்பிக்கை உருவாகும். ஆனால் இறுதியில் அமெரிக்காவில் நிரந்தர வதிவிடத்தை உறுதிப்படுத்தும் க்ரீன்கார்ட் அவனிடம் இல்லை என்று தெரிந்ததும் அவனது எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுவார்கள். கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லை என்னும் கதைதான்.
Add Comment