தொழிற்சாலைப் பெண்மணி
ரேவதி அத்வைதி கல்லூரியில் மெக்கானிகல் எஞ்சினியரிங் படிக்கப் போகும் போது அவரது வகுப்பில் அவர் மட்டும் ஒரே ஒரு மாணவி. நண்பர்கள், உறவினர்கள், “பெண்பிள்ளை ஏன் மெக்கானிகல் எஞ்சினியரிங் படிக்கப் போகிறாய்?” என்று கேட்டார்கள். அது மட்டுமல்லாது ஒரு பேராசிரியரே, “நீ வொர்க் ஷாப்பில் வேலை செய்யும் போது அதிக வெப்பமுள்ள இடத்தில் அதீத உடல் உழைப்பும் தேவையென்பதால் மயங்கி விழ வாய்ப்புள்ளது” என்றும் சொன்னார். ஆனாலும் ரேவதி தன் முடிவை மாற்றவில்லை. முக்கியமாக அவர் ஒரு நாளும் மயங்கி விழவில்லை. ஆனால் இரண்டு ஆண் மாணவர்கள் மயங்கி விழுந்ததைப் பார்த்திருக்கிறேன் என்று பின்னர் சொல்லியிருக்கிறார். மற்றவர்கள் எதிர்மறையாகச் சொன்னாலும் தனக்கு எது சரியெனப் படுகிறதோ அதைத் தன்னம்பிக்கையுடன் செய்பவர் என்பது இவரது இளமைப்பருவத்தில் பொறியியல் படிக்கும் முடிவை எடுக்கும்போதே தெளிவாகத் தெரிந்தது.
Add Comment