உலகப் பணக்காரர்களில் ஒருவர்
இமாலயப் பிரதேசத்தில் இமய மலையின் அடிவாரத்திலுள்ள கிராமங்களில் ஒன்று அது. 1950களின் பிற்பகுதியில் மின்சார வசதியோ அல்லது குடிநீர் வசதியோ வீடுகளில் இல்லை. அங்கு ஒரு சராசரி விவசாயக் குடும்பம். தாய் தந்தையர் இருவரும் பள்ளிக்கூடம் போய்ப் படித்ததில்லை. காரணம் அவர்கள் சிறுவர்களாக இருந்த காலத்தில் அண்மையிலுள்ள பள்ளிக்கூடம் பன்னிரண்டு கிலோ மீட்டர்கள் தூரத்தில் இருந்தது. அந்தக் குடும்பத்தில் பிறந்த பிள்ளைகளில் ஒருவன் ஜகத் சிங் சௌத்ரி.
Add Comment