39. காந்திஜி விடுதலை
1924 பிப்ரவரியில் மத்திய சட்டசபையில் கொண்டுவரப்பட்ட பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்துக்கு உள்ளாகவே இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து அளிப்பதற்காக ஒரு ராயல் கமிஷன் அமைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தில் மோதிலால் நேரு சில திருத்தங்களை வலியுறுத்தினார். இது குறித்த விவாதங்களின் இறுதியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
76 உறுப்பினர்கள் மோதிலால் நேருவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். எதிராக விழுந்த வாக்குகள் 48. அதிகாரிகள், அதிகாரிகள் அல்லாத இதர நியமன உறுப்பினர்கள், ஐரோப்பிய உறுப்பினர்கள், அரசாங்கத் தயவு இருந்தால்தான் தங்கள் வண்டி ஓடும் என நினைத்த புண்ணியவான்கள் போன்றவர்கள்தான் மோதிலால் நேருவுக்கு எதிராக வாக்களித்தார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
Add Comment