டிசி படக்கதை புத்தகங்களின் நாயகனான சூப்பர்மேனை எதிர்க்க வலிமையான எதிர்க் கதாநாயகனை உருவாக்கும் கலந்துரையாடல் நடந்தது. சூப்பர்மேனை அழிக்கும் வல்லமை படைத்தவனாக அவனை உருவாக்க நினைத்தனர். இந்த உரையாடலின் போது சூப்பர்மேனின் டூம்ஸ்டே எனக் கிறுக்கிவைத்தார் மைக் கார்லின். பின்னர் அந்த சர்வ வல்லமை படைத்த எதிர்க் கதாநாயனுக்கு டூம்ஸ்டே என்ற பெயரையே வைத்தனர். டூம்ஸ்டே (Doomsday) என்றால் அழிவுநாள், தீர்ப்புநாள் என்று பொருள் கொள்ளலாம்.
பின்னர் இந்தப் பெயரில் நோய்க் கிருமியால் உலகம் அழியும் என்கிற கதை கொண்ட ஹாலிவுட் படமொன்றும் வந்தது. மேற்கு அன்டார்ட்டிகாவில் உள்ள த்வைட்ஸ் பனிப்பாறைகள் உருகினால் உலகம் அழியக் கூடும் என்பதால் இந்தப் பனிப்பாறை டூம்ஸ்டே பனிப்பாறை என்ற செல்லப்பெயர் கொண்டே அழைக்கப்படுகிறது.
Add Comment