கடலூர் மாவட்டத்தின் தலையாய பெருமை வடலூரும் வள்ளலாரும். இங்கு நடக்கும் தைப்பூசம் சிறப்பு வாய்ந்தது. இது உருவ வழிபாடு அல்ல. இறைவனை ஜோதி வடிவாய்க் காண்பது.
ராமலிங்க அடிகள் பிறந்தது வடலூரை அடுத்த மருதூரில். அதே ஆண்டிலேயே தந்தை மரணமடைந்து விடுகிறார். தாயின் ஊரான பொன்னேரியில் குடியேறிச் சில காலம் வாழ்கிறார்கள். பின்னர் சென்னையின் ஏழுகிணறு பகுதியில் குடியேறினர். ராமலிங்க தன் வாலிப வயதில் பல தலங்களைச் சுற்றி கடைசியாகச் சிதம்பரம் வந்தடைகிறார். அங்கு கருங்குழி வேங்கட ரெட்டியார் அவரைத் தம் வீட்டில் வைத்துத் தொண்டு செய்ய விருப்பம் தெரிவித்தார். அப்படித்தான் கருங்குழியில் ஒன்பதாண்டுகள் வாழ்ந்து அருட்பாக்களை எழுதியுள்ளார்.
Add Comment