13 மறைமலையடிகள் ( 1876 – 1950 )
தமிழானது இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் என்று முத்தமிழாக வகைப்படுத்தப்படும். அவற்றுள் இயற்றமிழ் என்பது இசை அல்லது நாடகம் அல்லாத செய்யுள்கள் மற்றும் உரைநடைகள் இணைந்த தமிழ். அவற்றுள் செய்யுள் என்பது பாடல் வடிவில் அமைந்தது. புறநானூறும் பாடல்தான்; கம்ப இராமாயணமும் பாடல்தான்; பாரதியாரின் கவிதையும் பாடல்தான். அனைத்துமே செய்யுள் வடிவில் அமைந்தவை. ஆயினும் மூன்று செய்யுட்களையும் படிப்பதில், புரிந்து கொள்வதில் வேறுபாடு உண்டு. ஆனால் உரைநடை வடிவில் அமைந்த ஒரு பத்தியைப் படிப்பதில் இந்த வேறுபாடுகள் இருக்காது. பெரும்பாலும் எந்த உரைநடை வடிவில் அமைந்த நூல் அல்லது பத்தியையும் எவரும் இயல்பாகப் படிக்க இயலும்; இயலவேண்டும்.
ஆனால் இருபதாம் நூற்றாண்டில் தொடக்கப்பகுதி வரை, எந்த உரைநடையையும் எவரும் எளிதில் படித்துப் புரிந்து கொள்ளலாம் என்றவாறு நிலை இருக்கவில்லை. தமிழ் உரைநடையில் கொடுந்தமிழோடு, கூட வடமொழிச்சொற்கள், சொற்றொடர்கள், எழுத்துக்கள் கலந்து எழுதுவது நடைமுறையாக இருந்தது. பெரும் புலவர்களும், தமிழின் மிகப் பெரிய ஆளுமைகள் என்று அறியப்பட்டவர்களும் கூட இவ்வாறு செய்து கொண்டிருந்தார்கள். நமக்குத் தெரிந்த, இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞன் என்று அறியப்பட்டவர் பாரதி. அதனாலேயே மகாகவி எனப் புகழப்பட்டவர். அவர் ஆசிரியராக இருந்த பத்திரிகை சுதேசமித்திரன். அதில் எழுதப்பட்ட ஒரு பத்தியை இங்கே காணுங்கள்.
Add Comment