40. சமரசம்
மோதிலால் நேரு, காந்திஜி இருவருக்கும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவருக்கு நல்ல அபிப்ராயமும், மரியாதையும் இருந்தது. ஆனால், இருவராலும், ஒருவராது கொள்கையை இன்னொருவரால் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இருவரது இலக்கும் இந்திய சுதந்திரம் என்பதாகவே இருந்தபோதிலும், சட்ட மறுப்பு இயக்கத்தின் ஓர் அம்சமான சட்டசபைப் புறக்கணிப்பு என்பதில் அவர்களது கருத்து மாறுபாட்டு இருந்தது.
அதனால்தான் இருவரும் நேரில் சந்தித்து விரிவாகப் பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவாதித்தபோதும், சந்திப்பின் முடிவில் காந்திஜி, மோதிலால் நேரு இருவரிடமும் இருந்து தனித்தனி அறிக்கைகள் வெளியாயின. அந்த அறிக்கைகள் சொன்ன சேதிகள்தான் என்ன..?
Add Comment