இரத்தச் செல்கள்
நமது இரத்தத்தில் வெள்ளை இரத்தச் செல்கள், சிகப்பு இரத்தச் செல்கள் மற்றும் இரத்தத் தட்டுகள் என மூன்று முக்கிய வகையான செல்கள் இருப்பதை அறிவோம். பல நேரங்களில் இந்தச் செல்களின் எண்ணிக்கையில் தெரியும் மாற்றங்களை வைத்தே நமது உடலில் ஏதேனும் நோய் இருக்கிறதா இல்லையா என்று கண்டுபிடித்துவிட முடியும். ஆனால் சில நேரங்களில் இந்தச் செல்களிலேயேகூடப் பிரச்சினைகள் ஏற்படுவது உண்டு. அப்படி உலக அளவில் பல இலட்சக்கணக்கான மக்களைப் பாதிக்கக்கூடிய இரண்டு மிக முக்கியமான பிரச்சினைகளைப் பற்றி இப்பகுதியில் பார்க்கப் போகிறோம். இந்த இரண்டு நோய்களும் சிவப்பு இரத்தச் செல்களில் ஏற்படக்கூடியவை.
Add Comment