41. நகர்மன்றத் தலைவர் நேரு
காந்திஜியின் கொள்கைப் பிடிப்பு என்பது மிகவும் உறுதியானது. முரட்டுப் பிடிவாதம் என்றுகூடச் சொல்லலாம். அப்படிப்பட்ட காந்திஜியே, அனைவரையும் அரவணைத்து, ஒரே அணியாகத் திரட்டிப் போராடினால்தான், பிரிட்டிஷ் அரசாங்கத்தை அசைத்துப் பார்க்க முடியும் என்ற முடிவுக்கு வந்தார்.
1924 நவம்பரில் பம்பாயில் ஒரு அனைத்துக் கட்சிகள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். அதில் பங்கேற்க வருமாறு முகமது அலி ஜின்னா, அன்னி பெசன்ட், மோதிலால் நேரு உள்ளிட்ட பல தரப்பினருக்கும் அழைப்பு விடுத்தார். அந்தக் கூட்டத்தில் பல்வேறு அரசியல் கருத்துக் கொண்ட கட்சிகளும், நாட்டு நலனுக்காக ஒரே அணியாக அரசாங்கத்தை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தினார் காந்திஜி.
Add Comment