இலங்கையின் இளம் தலைமுறை பாஸ்போர்ட் ஆபீஸ்களின் வாசல்களில் நிற்கிறது. அல்லது விமானநிலைய டிபார்ச்சர் வரிசையில் பாஸ்போர்ட்டை ஏந்திக் கொண்டு நிற்கிறது. நிச்சயமற்ற எதிர்காலம், புரியாத அரசியல் குழப்பங்கள், என்றைக்குமே தீராத இனமுரண்பாடுகளுடன் மல்லுக்கட்டி எப்படியோ பிழைக்க முயன்றால் புதிதாய் விதித்து இருக்கும் அதிபயங்கர வரிகள் அரக்கனைப் போல விழுங்கப் பார்க்கின்றன.
இத்தனை அமளிதுமளியிலும் மூச்சைப் பிடித்துக் கொண்டு இங்கே பிழைத்துக் கொண்டிருக்கும் யுவன், யுவதிகளும் இல்லாமல் இல்லை. அவர்களுக்கும் காதல், கல்யாணம், தொழில் என்று கலர் கலராகக் கனவுகள் இருக்கின்றன!
கேள்விக்கணைகள் சீண்டல்கள் அருமை!
விஸ்வநாதன்