Home » ஊட்டி: இது ஜகரண்டா காலம்
இயற்கை

ஊட்டி: இது ஜகரண்டா காலம்

ஜகரண்டா

பனிக் காலத்திலிருந்து வசந்த காலத்திற்குப் பருவம் மாறும்போது நீலகிரி தன் மேனியின் வண்ணங்களை மாற்றத் தொடங்கும். பனியால் பட்டுப்போன மரங்கள் இலைகள் விடத் தொடங்கும். கறுத்துப்போன தேயிலையின் கரும்பச்சை இளம் பச்சைக்கு மாறும், அது அதிகாலை வெயில்பட்டு தளிர்களை தங்கத் துகள்களாக மாற்றும்.

இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல வசந்தகால வரவிற்கான முதல் விழிப்பரிசாக, ஜகரண்டா மரங்கள் ஊதா வண்ணம் கொண்ட பூக்களைத் தன் மடியெங்கும் பிரசவித்து மலையெங்கிலும் லாவண்டர் வண்ண மழையைப் பொழியச் செய்து கொண்டிருக்கும்.

ஜகரண்டா (jacaranda) என்பதொரு வெப்பமண்டலத் தாவரம். ஜகரண்டா மிமோசிஃபோலியோ என்ற (வாயில் நுழையச் சிரமப்படுத்தும் பெயர் கொண்ட) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. வட அமெரிக்காதான் இதன் தாய்வீடு. எப்படியோ நீலகிரி அதனை ஸ்வீகரித்துக் கொண்டிருக்கிறது. இதன் மலர்கள் மரத்தில் இருக்கும்வரை வெப்பத்தாலோ, காற்றாலோ வாடாது என்பதால் அதன் வண்ணநீட்சி தொடர்ந்து நீடித்திருக்கும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • ஜகரண்டா பெயர் ஜிகர்தண்டா போல குளுமையாக ஒலிப்பதால், உடனே படிக்கத் தூண்டியது.
    வானளவு வளர்ந்த பேரழகி ஊதா நிறத்தில் வெட்கப்பட்டால் எப்படி இருக்கும்? நிச்சயமாக கற்பனை செய்ய முடியவில்லை. சென்று பார்க்கத்தான் வேண்டும்.
    ஒரு முறை ஊட்டி போன போது, குறிஞ்சிப்பூ என்று சொல்லி நீல நிற மலர் கொத்துக்களை விற்றுக் கொண்டிருந்தனர்.
    அதன் உண்மையான பெயர் என்ன என்பதை இப்போதுதான் தெரிந்து கொண்டேன் .
    கோடை வெயில் ஆரம்பித்துவிட்ட காலத்தில், வழி நெடுகிலும் குளிர்ச்சியான எழுத்துக்களாலும் கவித்துவமான விவரிப்புகளினாலும் கடைசி வரை கவர்ந்தது கட்டுரை.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!