42. நேருவின் ராஜினாமா
அலகாபாத் நகர்மன்ற தலைவர் என்ற முறையில் ஜவஹர்லால் நேரு நேர்மைக்கு எடுத்துக்காட்டாகச் சிறப்பான முறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஒருமுறை நகர்மன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சிக்கான செலவு நகர்மன்றத்தால் அனுமதிக்கப்பட்ட தொகையைவிட அதிகமாகி விட்டது.
அடுத்த நகர்மன்றக் கூட்டத்தின்போது, அதிகப்படியாகச் செலவான தொகைக்கு அனுமதி கோரப்பட்டபோது, ஜவஹர்லால் நேரு அதனை ஆட்சேபித்தார். “அனுமதிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாகச் செலவழித்தது தவறு” என்று சுட்டிக் காட்டியதுடன், “அந்தக் கூடுதல் செலவுத் தொகையையை நாம் அனைவரும் சேர்ந்து நகர் மன்றத்துக்குக் கொடுத்து விடலாம்” என்று கூறினார்.
Add Comment