காசிக்கு வீசம் புண்ணியம் அதிகம் என்பார்கள். வீசம் என்பது முகத்தல் அளவு. அதாவது பதினாறில் ஒரு பங்கைக் குறிக்கும். பதினாறில் ஒரு பங்கு கூடுதல் என எப்படிப் புண்ணியத்தை முகர்ந்து எடுத்துத் துல்லியமாக அளந்தார்களோ தெரியவில்லை… அதுவும் காசியை விட வீசம் அதிகம் என்று சொல்கிறார்கள். அப்படியெனின் காசிக்கான புண்ணியத்தையும் அதற்கு முன்பே அளந்துவிட்டார்கள். அதுசரி… நாம் ஆற்றில் போடுவதையே அளந்து போடுவோம். புண்ணியத்தை அளக்க மாட்டோமா..? நாம் அடுத்த தலைமுறைக்குச் சேர்த்து வைக்கும் புதையல் ஆயிற்றே!
இதைப் படித்தீர்களா?
மகாராஷ்டிர மாநிலத்தில் செயல்படும் நவ நிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே, தமிழ்நாட்டில் உள்ள இந்தித் திணிப்பு எதிர்ப்புணர்வைச்...
தமிழ்நாட்டில் திருவண்ணாமலையிலும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திலும் தங்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின்...
Add Comment