17 – தணிகைமணி வ.ச.செங்கல்வராய முதலியார் (15.08.1883 – 25.08.1972)
‘தேவார ஒளிநெறிக் கட்டுரைகள்’ என்ற நூற்தொகுதி தமிழிலக்கிய உலகில் புகழ்வாய்ந்தது. தமிழின் சிறந்த மொழியியல் மற்றும் பக்திநெறிக் காப்பியங்கள் பன்னிரு திருமுறைகள். அந்தப் பன்னிரு திருமுறைகளில் மூவர் தேவாரம் என்பது இன்னும் சிறப்பு வாய்ந்தது. மூவர் தேவாரம் என்பது ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் என்ற மூவர் இயற்றிய தேவாரம். இவர்களை மூவர் முதலிகள் என்று அழைப்பது வழமை. இந்த மூவர் பாடிய தேவாரப் பதிகங்கள் மொத்தம் ஏழாயிரத்துக்கும் அதிகமானவை. அவற்றிற்கு ஓர் அகராதி இருந்தால் எவ்வளவு உதவியாக இருக்கும் என்று நினைத்துப் பார்த்தார் ஒரு தமிழறிஞர். அகராதி என்பது டிக்சனரி என்ற ஆங்கிலச் சொல்லில் நாம் புரிந்து கொண்டிருப்பது. ஆக்சுஃபோர்டு வெளியிட்ட ஆங்கில அகராதி மிகப்புகழ் வாய்ந்தது. அகராதியில் எந்த ஒரு சொல்லுக்குமான பொருள், சுட்டுரை, வழக்குரை, அந்தச் சொல்லை ஒட்டிய வேறு பொருள்கள், வேறு சொற்கள் என்று அனைத்தையும் அறிந்து கொள்ள முடியும். அது போலவே தேவாரப் பதிகங்களுக்கான ஒரு அகராதியைத் தனது தமிழ் அறிவு மற்றும் சைவ ஆராய்ச்சித் திறத்தால் உருவாக்கினார் அவர்.
Add Comment