Home » உளவுக்கு வந்த புறா: செய்தியும் சரித்திரமும்
உளவு

உளவுக்கு வந்த புறா: செய்தியும் சரித்திரமும்

கடந்த வாரம் ஒடிசாவில் இரண்டு உளவுப் புறாக்கள் பிடிபட்டிருக்கின்றன. புறாவின் காலில் ஏதோ கட்டப்பட்டிருந்ததாகவும், இன்னொரு புறாவின் காலில் வெண்கல வளையம் ஒன்று இருந்ததாகவும் பார்த்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள். சரி யாரோ புறாவுக்கு அலங்காரம் செய்து அழகு பார்த்திருக்கிறார்கள் என்று விட்டுவிடுவதற்கில்லை. யார் அனுப்பிய புறா, என்ன உளவு செய்ய வந்திருக்கிறது என்றெல்லாம் இனிதான் ஆராய வேண்டும். இருக்கட்டும். இத்தனைத் தொழில்நுட்பம் வளர்ந்த பிறகும் புறா விடு தூது (அல்லது உளவு) இன்னும் இருக்கிறதா என்பது முதல் ஆச்சர்யம். இப்போது வளர்ந்துவிட்ட அத்தனை தொழில்நுட்பத்தையும் நம்பாமல் புறாவை இதற்குப் பயன்படுத்துவதேன் என்பது மற்றொன்று.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • இரண்டு தாதுப் புறாக்கள் ஒரிசாவில் பிடிபட்ட செய்தியிலிருந்து ஆரம்பிக்கிறது கட்டுரை. பல மைல்கள் கடந்து பறக்கும் திறன், பயிற்றுவிக்கும் முறைமைகள் , அக்பர் அரண்மனையில் வளர்க்கப்பட்ட 20000 புறாக்கள் முதல் உலகப் போரில் ஒரு புறா கொண்டுவந்த செய்தியால் காப்பாற்றப்பட நூற்றுக்கணக்கான போர் வீரர்களின் உயிர்கள் என பல்வேறு தகவல்களைச் சொல்லிக் கொண்டே வரும்
    கட்டுரையாளர், கடைசி வரியில் கொஞ்சமும் எதிர்பாராமல் வெடித்துச் சிரிக்க வைத்து விட்டார்.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!