அடாப்டிவ் செல் சிகிச்சை (Adoptive Cell Therapy or ACT)
இம்யூனோதெரபியில் குறிப்பிடத்தகுந்த மற்றொரு வகைச் சிகிச்சை முறை இந்த அடாப்டிவ் செல் சிகிச்சை (ஆக்ட்). இந்த வகை இம்யூனோதெரபி சிகிச்சை முறை மூன்று வகையாகத் தயாரிக்கப்பட்ட டி-செல்களில் ஏதேனும் ஒன்றினைக் கொண்டு அளிக்கப்படுகின்றது. அவை (அ) டியூமர் இன்ஃபில்ட்ரேட்டிங் லிம்ஃபோசைட்ஸ் (Tumour infltrating lymphocytes or TIL) எனப்படும் டிஐஎல் (ஆ) டி செல் ரிசெப்டார் (T cell receptor or TCR) எனப்படும் டிசிஆர் மற்றும் (இ) கைமெரிக் ஆண்டிஜென் ரிசெப்டார் டி-செல்கள் (Chimeric antigen receptor T-cells or CAR T-cells) எனப்படும் கார் டி-செல்கள். இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான முறைகளில் செயல்படுகின்றன.
Add Comment