Home » மலைக்க ஒரு மலைப் பயணம்
சுற்றுலா

மலைக்க ஒரு மலைப் பயணம்

மலையை நோக்கி நடப்பது ஆதித்தாயின் குடிலை நோக்கிய பயணம் போல மனதிற்கு அருகில் மிக நெருக்கமாக இருக்கிறது எப்போதும். நீண்ட பயணங்களை இரவிலும், அதிகாலையிலும் கடந்து முடிப்பதையே விரும்புகிறேன். இந்தப் பயணம்கூட அப்படித்தான். இரவு முழுவதும் நீண்டு கொண்டே போய்க்கொண்டிருந்த இரவுப்பயணம் அது.

பட்டாம்பூச்சிகள் போல வாழத் தொடங்கி விட்டால் அல்லது வாழ்வைப் பார்க்கத் தொடங்கி விட்டால் இந்த வாழ்வு எப்படியெல்லாம் நேசிக்கத்தக்கதாக மாறிவிடும்!  வாழ்வின் மீதான பார்வை பெரும் சுமையாக மாறிவிடுகிற நொடிகளில் எல்லாம், பறவைகளையும், பட்டாம்பூச்சிகளையும் பார்ப்பேன். இரவீந்திரநாத் தாகூர் சொல்வதைப்போல…

The butterfly counts not
Months but moments and
Has time enough

நாங்கள் ஏன் எங்களுடைய மகிழ்ச்சிகளை எண்ணத்தொடங்குவது இல்லை…? நான் எண்ணத் தொடங்கி விட்டேன். இனி நீங்களும் கூட எண்ண வேண்டும் என்று விரும்புகின்றேன். என் வாழ்வில் இயற்கைக்கு அருகில் மிகமிக மகிழ்ச்சியாக இருந்த ஆதாம் மலையைப் பற்றிச் சொல்லப் போகின்றேன்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!