Home » ரெண்டு தல
கோடை

ரெண்டு தல

அதிக வெப்பம், அதிகக் குளிர் இரண்டையுமே உடல் ஏற்றுக் கொள்ளாது. மனிதரின் குணங்கள் வெப்பத்தைப் பொறுத்து மாறும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. வெப்பமண்டலப் பகுதிகளிலேயே பிறந்து, வளர்ந்த நமக்கே கோடை வெயில் தாங்காது. ஃபேனைப் பன்னிரண்டாம் நம்பரில் வைக்க வேண்டிய அளவு எரியும். நாடு விட்டு நாடு, கண்டம்விட்டு கண்டம் வந்த ஆங்கிலேயர்களுக்கும், இஸ்லாமிய அரசர்களுக்கும் சொல்லவா வேண்டும்?

சாமானியன் குளிரைத் தேடி ஒரு வாரம் சுற்றுலா செல்லலாம். நல்ல பணக்காரன் என்றால் வேலை வெட்டியை விட்டுவிட்டு ஒரு மாதம் கூடச் சுற்றி விட்டு வரலாம். அதிகாரமே அவர்கள் கையில் தான் என்றால்..? பிறகென்ன, வெப்ப காலம் முழுவதும் தனது பேலஸ் லொக்கேஷனை மாற்றிக் கொண்டு மெதுவாக வரலாம். அரசனோ, அரசியோ அனுமதித்தால் போதும். இதைப்பற்றித் தான் பார்க்கப் போகிறோம். ‘தலை’ நகர் நகர்வு. வெயில் என்றால் தலைக்கு மொட்டை போடலாம். குளிர்காலத்தில் குல்லா போடலாம். அதுபோல கோடைக் காலத்திற்கு என்று ஒரு தலைநகரும் குளிர்காலத்திற்கென்று ஒரு தலைநகரும் கொண்ட இடங்களின் அனல் பறக்கும் வரலாற்றைப் பார்ப்போம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • காஷ்மீருக்கு இரண்டு தலை நகரங்கள் என்று தெரியும். ஆனால், மஹாராஷ்டிராவுக்கும் இமாச்சல் பிரதேசத்துக்கும் ‘இரண்டு தலை’நகரங்கள் என்பது புதிய செய்தி. ஆங்கிலேயர்கள் சிம்லாவைத் தலைநகராகக் கொண்டிருந்தனர் என்பதும் கடைசியில் கங்கை கொண்ட சோழபுரத்தின் வீழ்ச்சி குறித்த செய்தியும் ஆச்சர்யப்பட வைத்தன.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!