கார்-டி செல் தெரபி
டிசிஆர் தெரபியில் உள்ள ஒரு மிக முக்கியமான சவால் எந்தப் புற்றுநோய்க்கு எதிராக இந்த டிசிஆர் செல்கள் செயல்பட வேண்டுமோ, அந்தப் புற்றுநோய்க்கான ஆண்டிஜென்கள் எம்ஹெச்ஸி புரதங்களால் அடையாளம் காட்டப்பட வேண்டும். புற்றுச் செல்களில் இந்த எம்ஹெச்ஸி புரதங்கள் மட்டுப்படுத்தப்பட்டு இருக்குமாதலால் இந்த டிசிஆர் தெரபி சில வகையான புற்றுநோய்களுக்கு மட்டுமே மிகுந்த பயன் அளிக்கக் கூடியதாக இருக்கிறது. இந்தச் சிக்கலைத் தவிர்க்கக் கூடிய வகையில் கண்டுபிடிக்கப்பட்டதுதான் கார்-டி செல் தெரபி.
Add Comment