பெயர் ஹம்சா ஹரூன் யூசஃப். வயது முப்பத்தேழு. பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்தவர். இந்தத் தகவல்களைச் சொல்லும்போது “யாரிவர்?” என்று நீங்கள் கேள்வி கேட்டால் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இங்கிலாந்தில் வாழும் பலருக்கே இந்தப் பெயருக்குரிய பிரபலம் யாரென்று அண்மைக்காலம் வரை தெரிந்திருக்காது.
இவர்தான் தற்போதைய ஸ்கொட்லாந்து நாட்டின் முதலமைச்சர். ‘ஸ்கொட்லாந்து ஒரு தனி நாடா? அதற்குத் தனியாக அரசாங்கம் உள்ளதா?’ என்று சிலருக்குக் குழப்பம் எழ வாய்யப்பு உண்டு.
ஸ்கொட்லண்ட்யார்ட் என்றால் உலகில் பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அது லண்டன் மெட்ரோபொலிடன் போலீஸ் சேவைக்கான ஒரு செல்லப் பெயரே தவிர அதற்கும் ஸ்கொட்லாந்துக்கும் எந்த வித தொடர்பும் இல்லை.
முதலில் UK எனச் சுருக்கமாக அழைக்கப்படும் யுனைட்டட் கிங்டத்தின் பகுதிகளைப் பற்றிப் பார்ப்போம். யுனைட்டட் எனும் ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழில் ஒன்று சேர்ந்த அல்லது ஐக்கியமான என அர்த்தம் கொள்ளலாம். அதனால் தான் யூகே என்பதைத் தமிழில் ‘ஐக்கிய இராச்சியம்’ என்று அழைப்போர் உண்டு.
ரொம்ப விவரமாக ஸ்காட்லாந்து நிலவரம் அறிய முடிந்தது. இன்னொரு ரீபெரெண்டம் வந்தால் என்ன ஆகுமோ?