வரும் முன் காப்போம்
இதுவரை இம்யூனோதெரபி சம்பந்தமாக நாம் பார்த்து வந்த அனைத்துமே புற்றுநோய்க்கான மருந்துகள். அதாவது நோய் வந்தபின் அதனைத் தீர்க்க அல்லது நோயின் அறிகுறிகளை மட்டுப்படுத்த அல்லது நோயாளிகளின் வாழ்நாளினைச் சிலகாலம் நீட்டிக்க உதவும் காரணிகள். நோய் வந்தபின் அதனுடன் போராடுவதைவிட நோயே வராமல் தடுப்பதுதானே சிறந்தது. புற்றுநோய் வராமல் தடுக்க ஏதேனும் தடுப்பு மருந்துகள் (Vaccines) உள்ளனவா? அதைப்பற்றித்தான் வரும் அத்தியாயத்தில் பார்க்க இருக்கின்றோம். புற்றுநோய்க்கான தடுப்பு மருந்துகளைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன் தடுப்பு மருந்துகளைப் பற்றி பொதுவான விசயங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். தடுப்பு மருந்துகள் என்றால் என்ன? அவை எவ்வாறு செயல்படுகின்றன? எத்தனை வகையான தடுப்பு மருந்துகள் இருக்கின்றன என்பதைப் பற்றியெல்லாம் விரிவாகப் பார்க்கலாம்.
Add Comment