நீங்கள் ஒரு மத்தியதரக் குடும்பப் பெண்ணாக இருந்து உங்கள் குழந்தையைக் கற்றல் குறைபாடுள்ள பெண்ணாகப் பள்ளி அறிவித்தால் என்ன செய்வீர்கள்? உங்கள் பெண்ணும் ஆங்கிலத்தில் படிக்கத் தடுமாறுகிறாள். ஆனால் மருத்துவர்கள் எந்த முடிவுக்கும் வர முடியாமல் பள்ளி சொல்வதை முயன்று பாருங்கள் என்றும் சொல்லிவிட்டால் என்ன செய்வீர்கள்? அதைத்தான் பேசாமல் ஒப்புக்கொள்வீர்கள் அல்லவா? ஆனால், ஒஹையோவில் ஜாய் பால்மர் என்ற அன்னை தன் பெண் டே லாமாவைக் கற்றல் குறைபாடுள்ள பெண்ணாகப் பள்ளி நிர்வாகம் அறிவித்தது முதல் இன்றுவரை பாடம் சொல்லிக் கொடுப்பதில் பிழை இருக்கிறது என்று தன் உள்ளுணர்வு சொல்லும் சேதியை மட்டுமே நம்பி எதிர்த்துக் கொண்டிருக்கிறார். அவர் அப்படி ஒன்றும் பெரும் பணக்காரர் இல்லை ஆனாலும் தன் பெண்ணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற ஒரு உத்வேகம். பாடத்திட்டங்களைப் பற்றி எதுவும் அறியாத அன்னை.
இதைப் படித்தீர்களா?
மகாராஷ்டிர மாநிலத்தில் செயல்படும் நவ நிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே, தமிழ்நாட்டில் உள்ள இந்தித் திணிப்பு எதிர்ப்புணர்வைச்...
தமிழ்நாட்டில் திருவண்ணாமலையிலும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திலும் தங்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின்...
Add Comment