Home » கடலோரக் கவலைகள்
நம் குரல்

கடலோரக் கவலைகள்

சில நாள்களுக்கு முன்னர் சென்னை கடற்கரையை ஒட்டிய நொச்சிக்குப்பம், பட்டினப்பாக்கம் போன்ற பகுதிகளில் இருந்த மீன் கடைகள் மாநகராட்சி நிர்வாகத்தினரால் அப்புறப்படுத்தப்பட்டன. வழக்கம் போல எதிர்க்கட்சிகள் இதனை எதிர்த்தன. பிறகு அனைவரும் அமைதியாகிவிட்டனர்.

மேலோட்டமான பார்வையில் இது ஒரு சிறிய, எளிய சம்பவம் என்று தோன்றும். ஆனால் காலம்தோறும், உலகெங்கும் ஆதிகுடிமக்கள் மீதான அடக்குமுறை என்பது இப்படியாகத்தான் ஆரம்பமாகியிருக்கின்றன. அவர்களை அப்புறப்படுத்தும் முயற்சிகள், அவற்றின் அனைத்து வகைகளிலும்-வடிவங்களிலும் கண்டிக்கத்தக்கதே.

போக்குவரத்து, சாலை விரிவாக்கம், மெட்ரோ ரயில் பணிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான நியாயமான காரணங்கள் அரசுக்கு இருக்கலாம். மீனவர்கள் சாலையோர நடைபாதைகளை ஆக்கிரமித்தே கடைகள் போட்டிருக்கலாம். சிறிது எல்லை மீறி சாலைகளையேகூட ஆக்கிரமித்திருக்கலாம். அதனைக் கண்டிக்கலாம், அபராதம் விதிக்கலாம், இடையூறின்றி அவர்கள் தமது தொழிலைப் பார்க்க அவர்களது குடியிருப்புப் பகுதியிலேயே வசதி செய்து தரலாமே தவிர, அதிரடி நடவடிக்கைகள் மூலம் அங்கிருந்தே அவர்களை அப்புறப்படுத்த நினைப்பது தவறு.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!